தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.4,000 கோடி மதிப்பிலான இணைய மோசடிகள் தடுப்பு

1 mins read
8f3a289f-a8a8-4ef5-94ea-be3d826aa1cd
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் நடந்து வரும் இணைய மோசடிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், பெரிய கட்டமைப்பு ஒன்றை உள்துறை அமைச்சு உருவாக்கியுள்ளது.

இதன் காரணமாக, ரூ.4,000 கோடி மதிப்பிலான மோசடிகள் தடுக்கப்பட்டு, குறைந்தது ஒரு மில்லியன் பேரின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்புத் துறை குற்றங்களைத் தடுக்கும் வகையில் ஒரு புதிய செயலியை நிறுவியுள்ளது. அதன் அடிப்படையில், இதுவரை, திறன்பேசிகளுக்கான 2.75 லட்சம் இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் பத்தாயிரம் பேரின் எண்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளார்.

பன்னாட்டுத் தொலைபேசிகளில் இருந்து மோசடி அழைப்புகளைக் கண்டறிய ஒரு செயலி உருவாக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 2 மாதங்களில் மட்டும் 25 முதல் 30 கோடி அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிந்தியா கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்