மும்பை: மகாராஷ்டிர மாநிலம் அமராவதியிலிருந்து தர்ணி என்னும் பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று பரத்வடி தானி வழித்தடத்தில் திங்கட்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது.
செமடோ அருகேயுள்ள பாலத்தின் கீழ் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
30 பேர் காயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு செமடோவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. எனினும், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விபத்தில் 30 பயணிகள் காயமடைந்ததை மாவட்ட ஆட்சியாளர் சவுரவ் கட்டியர் உறுதி செய்தார்.


