சிறுவன் தொண்டையில் சிக்கிய விசில் அகற்றம்

1 mins read
af414555-e09f-4f60-ae14-3e7d3795964a
சிறுவன் இப்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். படம்: இந்திய ஊடகம் -

நான்கு வயதுச் சிறுவனின் தொண்டையில் சிக்கிக்கொண்ட விசிலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

இந்தியாவின் ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஹின் என்ற சிறுவனின் தொண்டையில் பிளாஸ்டிக் விசில் சிக்கிக்கொண்டது.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான்.

தொடர்ந்து இருமலால் அவதிப்பட்ட அச்சிறுவன் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டான்.

உடனடியாக அறுவைச் சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அச்சிறுவனின் தொண்டையில் இருந்த விசிலை மருத்துவர்கள் அகற்றினர்.

இதுகுறித்து பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைநல அறுவை சிகிச்சைத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் பிரபுத் கோயல், "அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டபோது சிறுவனுக்கு இருமல் இருந்தது.

"மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டதால் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. மிகவும் சவாலான மூச்சுக்குழாய் பரிசோதனை செயயப்பட்டது.

"இது மூளைக்கு சேதம் விளைவிக்கும் ஆபத்து உள்ளதால் கவனமாக பரிசோதனை செய்யப்பட்டது.

"பின்னர், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொண்டையில் இருந்த விசில் அகற்றப்பட்டது. சிறுவன் இப்போது நலமாக இருக்கிறான்," என்று கூறினார்.