தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.40 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் என்கவுன்டரில் பலி

1 mins read
309e0fdb-d9bc-4741-bfe5-227291216d93
நக்சல் தலைவர் சுதாகர். - படம்: ஊடகம்

பிஜப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 40 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த நக்சல் தலைவர் சுதாகர் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திராவதி தேசியப் பூங்கா உள்ள வனப்பகுதியில் நக்சல் தலைவர் சுதாகர், தெலுங்கானா மாநில நக்சல் குழு உறுப்பினர் பண்டி பிரகாஷ், தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர் பப்பாராவ் உள்ளிட்ட நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலிசார், மாவட்ட ரிசர்வ் போலிசார், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் கோப்ரா பிரிவினர் இணைந்து தேடுதல் வேட்டையில் வியாழக்கிழமை (05.06.2025) ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மத்திய நக்சல் குழு உறுப்பினர் சுதாகர் கொல்லப்பட்டார். எனினும் அவரது மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பசவராஜு, என்கவுன்டரில் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பின் நக்சல் தலைவர் சுதாகர் கொல்லப்பட்டது பாதுகாப்புப் படைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து நக்சல் தேடுதல் வேட்டை நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்