ஆந்திரா வாக்காளர் பட்டியலிலிருந்து 44.71 லட்சம் பேர் நீக்கம்

ஆந்திரா வாக்காளர் பட்டியலிலிருந்து 44.71 லட்சம் பேர் நீக்கம்

1 mins read
dd639a95-5583-4c8c-95ae-4bc4436f4ba5
பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கானோர் நீக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையர் விவேக் யாதவ் குறிப்பிட்டார். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

அமராவதி: ஆந்திராவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையின்மூலம், 44.71 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.16 கோடியாக உள்ளது என அந்த மாநிலத்தின் தேர்தல் ஆணையர் விவேக் யாதவ் தெரிவித்துள்ளார்.

அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கானோர் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

நீக்கப்பட்டோரில், பதிவுசெய்த முகவரிகளில் இல்லாதவர்கள் 776,900 பேரும் ஆந்திராவை விட்டு நிரந்தரமாக வெளியேறியவர்கள் 14,34,112 பேரும் அடங்குவர் எனத் தெரிய வந்தது.

“வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 1,519,558 ஆகும். ஆந்திராவில் இரு வெவ்வேறு இடங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தவர்கள் 732,566 பேர். மற்றவர்கள் 8,387 பேர் எனத் தெரியவந்துள்ளது.

“மொத்தம் 4,471,523 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டன,” என்று ஆணையர் விவேக் யாதவ் தெரிவித்தார்.

திருப்பதியில் 287,759 பேர் நீக்கப்பட்ட நிலையில், ஜூலை 31 முதல் ஆகஸ்டு 30ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் குறித்து ஏதேனும் சந்தேகமோ, தனிப்பட்ட கருத்தோ இருப்பின் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் திரு விவேக் யாதவ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்