ஓராண்டில் 4.6 கோடி பேருக்கு வேலை

1 mins read
d7152798-866c-4d31-ba25-999794d123c1
இந்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய வரவுசெலவுத் திட்டம் குறித்து இணையக் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை பேசினார்.

அதில், கடந்த 2017-2018ல் ஆண்டுகளில் 6 விழுக்காடாக இருந்த வேலையற்றோர் விகிதம், 2023 - 2024 ஆண்டுவாக்கில் 3.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது.,

அத்துடன் இதே காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற பெண்களின் எண்ணிக்கை 22 விழுக்காட்டிலிருந்து 40.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றார்.

மேலும், கடந்த 2014 - 2024 வரையிலான 10 ஆண்டுகளில் நாட்டில் 17.1 கோடி பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்றும், கடந்த ஆண்டு மட்டும், 4.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், தொழிலாளர் மருத்துவக் காப்பீடு போன்ற சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டோர் எண்ணிக்கை, 24.4 விழுக்காட்டில் இருந்து, 48.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்இந்தியாவேலைவாய்ப்பு