சோதனையில் ரூ.5 கோடி ஹவாலா பணம் சிக்கியது

1 mins read
1ead1bea-a57c-422e-ba7b-bb690821e66c
காவல்துறையிடம் சிக்கிய கட்டுக்கட்டான பணம். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் காவல்துறை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தில் ஆவணமின்றி பணம் எடுத்துச் செல்லப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோழிக்கோட்டில் கொடுவள்ளி என்ற இடத்தில் காவல்துறை தீவிர வாகனச் சோதனை நடத்தியது.

அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறை மறித்து நிறுத்தியது.

அந்தக் காரில் இருந்த இருவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினர்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை காரை சோதனையிட்டது.

காரில் ரகசிய அறை அமைத்து ரூ.5 கோடி பணம் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஹவாலா பணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டது.

காரில் இருந்த இருவரையும் கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

பறிமுதல் செய்த ரூ.5 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

குறிப்புச் சொற்கள்