இந்தியாவில் 5 ஓடிடி தளங்களுக்குத் தடை

இந்தியாவில் 5 ஓடிடி தளங்களுக்குத் தடை

1 mins read
b163ea81-7345-4887-8046-e3d8be027949
சந்தாதாரர்களைக் கவர்வதற்காக ஆபாசக் காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தததால் சில ஓடிடி தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

புதுடெல்லி: ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதற்காக, ஐந்து ஓடிடி தளங்களுக்கு இந்தியாவின் மத்தியத் தகவல், ஒளிபரப்பு அமைச்சு தடை விதித்துள்ளது.

MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel, Jugnu ஆகிய ஐந்து தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்த ஐந்து தளங்களும் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தாதாரர்களைக் கவர்வதற்காக ஆபாசக் காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தளங்களுக்குத் தொடர்புடைய இணையதளங்களையும், செயலிகளையும் உடனடியாக முடக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கடந்த சில மாதங்களாகவே இந்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓடிடி தளங்களைக் கண்காணித்து வருகிறது.

ஏற்கனவே 25 தளங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சில தளங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மின்னிலக்க ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தத் தடை நடவடிக்கை மின்னிலக்கத் தளங்களில் தரமான, ஆரோக்கியமான உள்ளடக்கங்களை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்