புதுடெல்லி: குஜராத், நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை (மே 4) வெளியாயின.
கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு தேதிகளில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4ஆம் தேதி நடைபெற்றது.
அத்துடன், வேறு ஐந்து மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகளும் அதே நாளில் எண்ணப்பட்டன.
இடைத்தேர்தலில் நான்கு தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. இரணு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றன.
குஜராத்தின் உம்ரேத், நாகாலாந்தின் கோரிடாங் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
திரிபுராவின் தரம்நகர் தொகுதியிலும் மகாராஷ்டிராவின் ராகுரி தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் துணை முதல்வருமான சுனேத்ரா பவார் கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கர்நாடகத்தின் பாகல்கோட்டை, தாவணகெரே தெற்கு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டது.

