புதுடெல்லி: ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தலாகக் கருதப்படும் ஒரு சம்பவத்தில், அந்தமான் கடற்பகுதியில் ஒரு மீன்பிடிப் படகில் இருந்து சுமார் ஐந்து டன் போதைப்பொருள்களை இந்திய கடலோரக் காவல்படையினர் கைப்பற்றியதாக இந்திய தற்காப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இது இந்தியக் கடலோரக் காவல்படையின் இதுவரை இல்லாத மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டையாக இருக்கும்,” என்று அதிகாரிகள் கூறினர்.

