தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று நாள்களில் 509 பாகிஸ்தானியர் வெளியேறினர்

1 mins read
88d10449-2343-4492-b881-bcf0bdbce41a
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லும் பாகிஸ்தானியர்கள்.   - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

பல்வேறு விசாக்களில் வந்த பாகிஸ்தானியர் வெளியேற இந்தியா காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

‘சார்க்’ விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26ஆம் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27ஆம் தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29ஆம் தேதிக்குள்ளும் வெளியேற கெடு விதிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் 509 பாகிஸ்தானியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றனர். இவர்களில் 9 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும், சாதாரண அதிகாரிகளும் அடங்குவர்.

பாகிஸ்தானியர்களை வழியனுப்ப அட்டாரி எல்லையில் அவர்களின் இந்திய உறவினர்கள் கண்ணீர்மல்க திரண்டனர். இதனால், அட்டாரி எல்லை உணர்ச்சிமயமாகக் காணப்பட்டது.

இதேபோல் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த இந்தியர்களை வெளியேறும்படி பாகிஸ்தான் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, கடந்த மூன்று நாள்களில் அட்டாரி எல்லை வழியாக 745 இந்தியர்கள் இந்தியா திரும்பி உள்ளனர். அவர்களில் 14 தூதரக அதிகாரிகளும் அடங்குவர்.

மேலும் குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை, மூன்று லட்சம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்