செலவுக் கணக்கைக் காட்டாத வேட்பாளர்கள் 529 பேர் தகுதி நீக்கம்

செலவுக் கணக்கைக் காட்டாத வேட்பாளர்கள் 529 பேர் தகுதி நீக்கம்

2 mins read
இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை
0ef42127-b944-49f3-9115-a31e21e1dc19
தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் அடுத்த மூன்று ஆண்​டு​களுக்கு நாடாளு​மன்​ற, சட்​டமன்றத் தேர்​தல்​களில் வாக்​களிக்​கவோ போட்​டி​யிடவோ முடி​யாது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: கடந்த மக்​களவை, சட்​டமன்றத் தேர்​தல்​களில் போட்​டி​யிட்​டு, நிர்​ண​யிக்​கப்​பட்ட காலத்​திற்​குள் தேர்​தல் செல​வுக் கணக்​கு​களைத் தாக்​கல் செய்​யத் தவறிய வேட்​பாளர்​கள் 529 பேரைத் தகுதி நீக்​கம் செய்து தேர்​தல் ஆணை​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதையடுத்​து, அவர்​கள் அடுத்த மூன்று ஆண்​டு​களுக்கு நாடாளு​மன்​ற, சட்​டமன்றத் தேர்​தல்​களில் வாக்​களிக்​கவோ போட்​டி​யிடவோ முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது என்று இந்து தமிழ் திசை இணையத்தளம் கூறுகிறது.

1951ஆம் ஆண்டு மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டப் பிரிவு ‘10ஏ’இன்கீழ் செலவுக் கணக்​கு​களை முறைப்​படி தாக்​கல் செய்​யாத அந்த வேட்​பாளர்​கள்மீது தகுதி நீக்க நடவடிக்​கையைத் தேர்​தல் ஆணை​யம் எடுத்​துள்​ளது.

கடந்த மார்ச் 16ஆம் தேதி பிறப்​பிக்​கப்​பட்ட இந்த உத்​தர​வின்​படி, மேற்கு வங்​கத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட நாடு முழு​வதும் உள்ள சுயேச்சை வேட்​பாளர்​கள் 529 பேர் தங்​களது அடிப்​படைத் தேர்​தல் உரிமை​களை இழக்​கின்​றனர்.

இந்தியச் சட்டத்தின்கீழ், தேர்​தலில் போட்​டி​யிடும் ஒவ்​வொரு வேட்​பாள​ரும் தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட 30 நாள்களுக்​குள் தங்​களது முழு​மை​யான தேர்​தல் செல​வுக் கணக்​கைத் தாக்​கல் செய்​வது கட்​டாய​ம். அவ்வாறு செய்யத் தவறு​வோரை மூன்று ஆண்​டு​களுக்​குத் தகுதி நீக்​கம் செய்​யத் தேர்​தல் ஆணை​யத்​திற்கு அதி​காரம் உள்​ளது.

இந்​தத் தகுதி நீக்​க​மானது இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​தல்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். அதே​நேரம், மாநிலத் தேர்​தல் ஆணை​யங்​களால் நடத்​தப்​படும் உள்ளாட்சித் தேர்​தல்​களுக்கு இது பொருந்​தாது.

அதி​கபட்​ச​மாக உத்தரப் பிரதேசத்தில் 120 பேர், கர்​நாடக மாநிலத்தில் 59 பேர், மத்​தியப் பிரதேசத்தில் 39 பேர், சத்​தீஸ்​கரில் 36 பேர், தமிழ்​நாட்டில் 33 பேர், பீகார் மாநிலத்தில் 28 பேர், தெலுங்​கா​னா, பஞ்​சாப், உத்​த​ராகண்ட் ஆகியவற்றில் தலா 27 பேர், ஆந்​திரப் பிரதேசத்தில் 25 பேர், கேரளாவில் 16 பேர் உட்படப் பல்வேறு மாநிலங்​களின் சுயேச்சை வேட்​பாளர்​கள் தகுதி நீக்​கப் பட்​டியலில்​ இடம்​பெற்​றுள்​ளனர்​.

குறிப்புச் சொற்கள்