புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி 45 நாள்கள் நடைபெற்றது.
இதில் கிட்டத்தட்ட 55 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மகா கும்பமேளா என்பதால், 73 நாடுகளின் தூதர்கள், 116 நாடுகளின் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
நேப்பாளம், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, கனடா, பங்ளாதேஷ் ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், மலேசியா, நியூசிலாந்து, இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்றனர்.
மகா கும்பமேளாவில் வெளிநாட்டுப் பக்தர்களும் பங்கேற்பார்கள் என்பதற்காக அனைத்துலக தரத்தில் நவீன வசதிகளுடன் கூடாரங்களின் அறைகள், குடில்கள் அமைக்கப்பட்டன.
இவற்றில் தங்குவதற்கு இந்தியர்கள், வெளிநாட்டினர் இணையத்தளத்தில் முன்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, தங்கும் கூடாரங்கள், உணவு விடுதிகள் என மாநிலச் சுற்றுலா கழகத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தனியார் கூடாரங்களுக்கு ரூ.73 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த தொகை இறுதி கணக்கீட்டுக்கு பிறகு மேலும் உயரும் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
கும்பமேளாவுக்கு வந்த வெளிநாட்டினர் அருகில் உள்ள வாராணசி, அயோத்தி, சித்ரகூட், மதுரா மற்றும் கோரக்பூருக்கும் விஜயம் செய்தனர். இதனால் அங்கும் உணவு விடுதிகள், வழிகாட்டிகள், தனியார் போக்குவரத்து மற்றும் உள்ளூர் வணிகர்கள் அதிக வருவாய் ஈட்டினர்.