சென்னை: சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி கோவில் நிர்வாகத்துக்கு ஆறு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
வர்தமன் ஜெயின் என்ற அந்த பக்தர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி என்ற தொலைக்காட்சி அலைவரிசைக்கு ரூ.5 கோடியும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாயும் வழங்கியதாக கோவில் நிர்வாகத் தரப்பு தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் இந்தத் தொகைக்கான காசோலைகளை வழங்கியதாகவும் இதற்காக வர்தமன் ஜெயின் தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு வந்திருந்ததாகவும் கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வெங்கடேஸ்வரா பக்தி அலைவரிசையானது, ஆன்மீகத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பும் தொலைக்காட்சி ஆகும்.
வெங்கடேஸ்வரா அறக்கட்டளையானது, பசு பாதுகாப்பிலும் ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக் கூறுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.