பெங்களூரு: கர்நாடகத்தில் கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலத்தின் நெலமங்கலத்தில் காரின் மீது சரக்கு லாரி கவிழ்ந்ததில் காருக்குள் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தனர்.
சனிக்கிழமை (டிசம்பர் 21) காலை நெடுஞ்சாலை 48ல் அந்த விபத்து நிகழ்ந்தது.
சரக்கு லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரிக்கிறது.

