விசாகப்பட்டினத்தில் 65 அடி உயரத் திரிசூலம்

விசாகப்பட்டினத்தில் 65 அடி உயரத் திரிசூலம்

1 mins read
accd8f2d-3d04-40f8-a6a8-65430cdd9aba
கடந்த எட்டு மாதங்களாகச் சிலை வடிக்கும் பணி நடைபெற்று வந்தது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 65 அடி உயர, சிலை வடிவத் திரிசூலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி, மக்களைக் கவர்ந்த சுற்றுலாத்தலமாகும். அங்கு ஏற்கெனவே அமைக்​கப்​பட்​டுள்​ள சிவன், பார்​வதி சிலைகளைக் காண நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

தற்போது கோடை விடு​முறை என்பதால் சுற்​றுலாப் பயணி​களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கைலாசகிரிக்குப் பெருமை சேர்க்கும் வகையில், விசாகப்​பட்​டினம் நகர வளர்ச்சிக் கழகம் அங்கு 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலச் சிலையை நிறுவியுள்ளது. நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் திரிசூலத்தைக் காண முடியும்.

கடந்த எட்டு மாதங்களாக சிலை வடிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆந்திர மாநிலக் கல்வி அமைச்சர் நாராயணா அதைப் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைத்தார்.

இரவு நேரத்தில் விளக்கு அலங்காரத்தில் திரிசூலச் சிலை அழகாக ஒளிர்ந்து பெருவியப்பை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

65 அடி உயரம் கொண்ட திரிசூலத்​தில் உடுக்கை மட்​டும் 18 அடி அகல​மும் 10 அடி உயர​மும் கொண்​டுள்​ளது.

குஜ​ராத்​தில் உள்ள சோமநாதர் கோயில் புனரமைக்​கப்​பட்டு 75 ஆண்​டு​கள் நிறைவடைவதை நாம் கொண்டாடும் வேளை​யில், கைலாசகிரி​யில் 65 அடி உயரத் திரிசூலம் அமைக்​கப்​பட்​டிருப்​பது ஆந்​தி​ரா​வுக்குப் பெருமை தரும் விஷயம் என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் நாராயணா.

குறிப்புச் சொற்கள்