ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு பிப்ரவரி 2ல் விசாரணை

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு பிப்ரவரி 2ல் விசாரணை

1 mins read
188f5a3e-051c-43f6-bc4e-fd4eeba59a91
-

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது பிப்ரவரி 2ஆம் தேதி இறுதி விசாரணை தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க நீதி பதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே. அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வை முந்தைய தலைமை நீதிபதி எச்.எல். தத்து நியமித்தார்.

இந்த அமர்வு ஜனவரி 8ஆம் தேதிக்குள் (நேற்று) அனைத்துத் தரப்பினரும் தங்கள் இறுதி வாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி ஆர்.கே. அகர்வால் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் நீதிபதி அமிதவா ராய் நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் பதிவுத்துறை நேற்று முன்தினம் மாலை இதற் கான அறிவிப்பை வெளியிட்டது. அடங்கிய அமர்வை முந்தைய தலைமை நீதிபதி எச்.எல். தத்து நியமித்தார். இந்த அமர்வு ஜனவரி 8ஆம் தேதிக்குள் (நேற்று) அனைத்துத் தரப்பினரும் தங்கள் இறுதி வாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி ஆர்.கே. அகர்வால் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் நீதிபதி அமிதவா ராய் நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் பதிவுத்துறை நேற்று முன்தினம் மாலை இதற் கான அறிவிப்பை வெளியிட்டது.