புதுடெல்லி: பயங்கரவாதிகளுக்கு உதவும் பாகிஸ்தான் அரசைப் போல, கறுப்புப் பணப் பதுக்கல் காரர்களுக்கு எதிர்க்கட்சிகள் உதவி வருகின்றன என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மத் திய அரசைக் குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் தலைவர்கள், அவர் களை அறியாமல் தங்களது 60 ஆண்டுகால ஆட்சிக் காலத்- தில் நடந்த நிர்வாகத் தோல்விகளை ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். நாட்டில் உள்ள கறுப்புப் பணத்- தைக் கண்டறிந்து வேரறுப்பதற்- கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
அதில் முக்கியமான ஒன்று ரூபாய் நோட்டு மீட்பு அறிவிப்பு. இதன் காரணமாக மக்களுக்குச் சில அசௌகரி யங்- கள் ஏற்பட்டிருப்பதை உணர முடி- கிறது. "மலை போல குவிந்து கிடக்- கும் குப்பைகளை அகற்றும் போது, அதி லிருந்து விரும்பத்தகாத நாற்- றம் வருவது இயல்பு. அதைச் சிறிது நேரம் சகித்துக்கொண்டு குப்பைகளை முழுமையாக அகற்- றிவிட்டால், அந்த இடத்தைப் பூந்- தோட்டமாக மாற்றிவிடலாம். அதைப் போலத்தான் இந்தக் கறுப்- புப்பண ஒழிப்பு நடவடிக்கை யையும் பார்க்க வேண்டும்," என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளத் தொண்டர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார். அவரது சொந்தத் தொகுதியான அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை பாஜக தொண்டர்களுடன் பகிர்ந்து உண்ணுகிறார். படம்: பாஜக டுவிட்டர்

