சிபிஎஸ்இ பள்ளிகள் முதல்வரை தன்னிச்சையாக நியமிக்க முடியாது

சிபிஎஸ்இ பள்ளிகள் முதல்வரை தன்னிச்சையாக நியமிக்க முடியாது

1 mins read

புதுடெல்லி: சிபிஎஸ்இ கல்வி முறையைக் கொண்ட தனியார் பள்ளிகள் இனி தன்னிச்சையாக முதல்வர்களை நியமிக்க முடி- யாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க முடியும். அதுவும் தேர்வுக்குழுவின் வாயிலாகவே அந்த நியமனம் இருக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தன்னாட்சி இழக்கப்படவுள்ளது.

எனவே பள்ளி முதல்வராக விரும்பும் ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு எழுதியாக வேண்டும் என்று சிபிஎஸ்இ முடி- வெடுத்துள்ளது. ஏற்கெனவே முதல்வர்களாக இருப்பவர்களும் தேர்வு எழுதியாக வேண்டும். ஆனால் இந்தப் புதிய விதிமுறை அரசுப் பள்ளி முதல்வர்களுக்குப் பொருந்தாது. புதிய விதிமுறைகளின்படி, முதல்வர் தேர்வுக்குழுவில் உள்ள- வர் பள்ளிகள் நிர்வாகத்தில் அனு- பவம் பெற்றவராகவோ அல்லது கல்விப்புலம் சார்ந்தவராகவோ இருப்பது அவசியம்.