விமான நிலையங்களில் சுற்றுப்பயணிகளுக்கு இலவச 'சிம்'

1 mins read

வெளிநாட்டுச் சுற்றுப்பயணி களுக்கு இலவச தொலைபேசி 'சிம்' அட்டைகளை இந்தியா வழங்கவுள்ளது. இந்தியாவின் 12 முக்கிய விமான நிலையங்களில் பணம் செலுத்தப்பட்ட தொலைபேசி 'சிம்' அட்டைகள் வழங்கப்படும். வெளி நாட்டுப் பயணிகளிடையே இந்தி யாவை உலகச் சுற்றுலாத் தள மாகப் பிரபலப்படுத்தும் நோக்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கியுள்ள இந்தத் திட்டம், பயணிகள் பாது காப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் உடனே தொடர்புகொள்ள உதவும் எனக் கூறப்பட்டது. 161 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இதனால் பயனடைய லாம். தொடக்கமாக, சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, வாரணாசி, ஜெய்பூர், பான்ஜிம், அகமதாபாத், அமிர்தசரஸ், லக்னோவ் ஆகிய விமான நிலை யங்களில் இந்த தொலைபேசி 'சிம்' அட்டைகள் வழங்கப்படும். மின்னியல் விசா மூலம் இந்தியா செல்லும் பயணிகளுக்கு 'சிம்' அட்டைகள் சுங்கச் சாவடியி லேயே வழங்கப்படும் என்று உள் துறை அமைச்சின் பேச்சாளர் கூறினார். டெல்லி விமான நிலையத்திலும் மற்றும் சில விமான நிலையங்களி லும் அடுத்த வாரம் முன்னோடித் திட்டம் தொடங்கப்படவுள்ளது.