தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டினர் 71 பேர் நாடுகடத்தல்

1 mins read
0ae4cd34-58f2-46a8-b794-360cd7f52048
நாடுகடத்தப்பட்டோரில் 47 பேர் பங்ளாதேஷியர். - மாதிரிப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 47 பங்ளாதேஷியர், 17 மியன்மார் ரோஹிங்யாக்கள், ஏழு நைஜீரியர்கள் என மொத்தம் 71 பேரை டெல்லிக் காவல்துறை கடந்த மே மாதம் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பியது.

இதுகுறித்து விளக்கிய துவாரகா மாவட்டக் காவல்துறை உயரதிகாரி அங்கித் சிங், “அந்த வெளிநாட்டவர்கள் செல்லத்தக்க விசா இன்றி இந்தியாவில் கூடுதல் காலம் தங்கியிருந்தனர்,” என்றார்.

அவ்வாறு பிடிபட்ட வெளிநாட்டவர்கள் முதலில் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் வெளிநாட்டவர் வட்டாரப் பதிவு அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் நாடுகடத்தும்படி அந்த அலுவலகம் உத்தரவிட்டது.

இம்மாதம் 2ஆம் தேதி டெல்லி வடமேற்கு மாவட்டக் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்ளாதேஷியர் 18 பேர் பிடிபட்டனர். மொத்தம் 36 நடைபாதைகளிலும் 45 சந்துகளிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக வடமேற்கு மாவட்டக் காவல்துறைத் துணை ஆணையர் பீஷம் சிங் தெரிவித்தார்.

அதே நாளில், டெல்லியின் சீமாபுரி பகுதியிலும் 16 பங்ளாதேஷியரை ஷாதாரா மாவட்டக் காவல்துறை கைது செய்தது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாவெளிநாட்டவர்நாடுகடத்தல்