சந்தேகம் வலுக்கிறது

சந்தேகம் வலுக்கிறது

1 mins read
7d10a720-7d2c-42c0-88e3-c48ce54b1862
-

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததில் மர் மம் நிலவி வரும் வேளையில் அந்த மர்மத்தை விலக்கி உண்மையை விளக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுக்கத் தொடங்கி உள்ளன.

இம்மாதம் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமுற்றதாக அறிவிக்கப் பட்ட ஜெயலலிதாவின் உடல் மறு நாளே நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நிலை சரியாகி விரைவில் வீடு திரும்புவார் என்று அறிவிக் கப்பட்ட நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த விதம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான வைத்தியநாதன் தமக்கும் இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.