சசிகலாவின் சமய சார்பற்ற அரசியல் கொள்கை: திருமாவளவன் பாராட்டு

சசிகலாவின் சமய சார்பற்ற அரசியல் கொள்கை: திருமாவளவன் பாராட்டு

1 mins read
c7e2b225-3a5c-4f95-ae25-2d8b1bf6415f
-

சென்னை: அதிமுக பொதுச்செய லராக சசிகலா பொறுப்பேற்றுள்ள நிலையில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க அக்கட்சித் தலைமை வியூகம் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுக தலைமைக்கு ஆதர வாகச் செயல்பட்டதாகக் கூறப் படும் முன்னாள் தலைமைச் செய லர் ராம மோகன ராவ், சேகர் ரெட்டி ஆகியோர் மீதான நடவடிக் கையே இதற்குக் காரணம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மறைவையடுத்து அதிமுக, பாஜக இடையேயான நெருக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்களுக்கு எதி ராகச் செயல்படுவதாக அதிமுக தலைமை கருதுகிறது.

இந்நிலையில் ராமமோகன ராவ், சேகர் ரெட்டி மீதான நடவடிக் கைகள் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதைய டுத்தே காங்கிரசுடன் நெருக்கம் பாராட்ட வேண்டும் என சசிகலாவை அவரது உறவினர்கள் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சசிகலாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் காலஞ் சென்ற திரைப்பட நடிகர் சிவாஜி யின் குடும்பத்தினரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றதை வரவேற்பதாகக் கூறினார். "ஜெயலலிதாவுக்குப் பிறகு துணிந்து பொறுப்பை ஏற்றுள்ளார் சசிகலா. தமிழகத்தில் சாதி, சமய சார்பற்ற அரசியலை நடத்துவோம் என்று அவர் உறுதியளித்ததை வரவேற்கிறோம். "இந்தச் சந்திப்பை தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். இது அத்தகைய சந்திப்பு அல்ல," என்றார் திருமாவளவன்.