சாலை விபத்து: பக்தர்கள் மூவர் பலி

சாலை விபத்து: பக்தர்கள் மூவர் பலி

1 mins read

விழுப்புரம்: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர்கள் மூவர் பரிதாபமாகப் பலியாகினர். சென்னையைச் சேர்ந்த 62 பக்தர்கள் வெள்ளிக்கிழமை மாலை சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல பேருந்து ஓட்டுநர் முயன்றார். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது பேருந்து பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பேருந்தின் இடதுபக்கம் அமர்ந்திருந்த மூன்று பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.