லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். லக்னோவில் நடந்த தேசிய கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ்பால் யாதவை நீக்க வேண்டும் என ராம்கோபால் யாதவ் கூறினார். இந்நிலையில் நடந்து முடிந்த செயற்குழுக் கூட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் தெரிவித்துள் ளார். கட்சியின் பொதுச் செயலாளரான ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டு காலத்திற்கு நீக்குவதாகவும் ஜனவரி 5ஆம் தேதி கட்சியின் புதிய கூட்டம் நடக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு
1 mins read
-

