கெஜ்ரிவால்: பிரதமர் நரேந்திர மோடியின் உரை ஏமாற்றமளிக்கிறது

கெஜ்ரிவால்: பிரதமர் நரேந்திர மோடியின் உரை ஏமாற்றமளிக்கிறது

1 mins read
0028b895-0105-4c09-9fb2-f524b4829823
-

பிரதமர் மோடியின் உரை ஏமாற்றமளிப்பதாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரு மான அரவிந்த் கெஜ்ரி வால் கூறியிருக்கிறார். "பிரதமர் மோடி இந்திய மக்களை ஏமாற்றிக்கொண்டிருக் கிறார். கறுப்புப் பணத்தை மீட்பேன் என்று தேர்தல் பிரசாரத்தில் சூளுரைத்த அவர், கறுப்புப் பணம் என்று ஒரு காசைக்கூட மீட்கவில்லை. அவருடைய பண நோட்டுகள் மீட்புத் திட்டத்தின் மூலம் நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் குறைந்தபாடில்லை. பிரதமரின் பண மீட்புத் திட்டத்தால் ஏராளமான மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களது துயரைத் துடைக்கும் வகையில் எவ்வித நிவாரணமும் அறிவிக்கப்படாதது வருத்தத்தை அளிக்கிறது," என்று டெல்லி முதல்வர் கெஜ்ரி வால், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

"பிரதமர் மோடி மீது மக்களுக்குக் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. தங்கள் சொந்தப் பணத்தை வங்கிகளில் இருந்து எவ்விதத் தடையுமின்றி எப்போது எடுக்க முடியும் என்பது பற்றி பிரதமர் மோடி தனது உரையில் ஏதேனும் கூறுவார் என்று ஆவலுடன் அவரது அலுப்பான உரையைச் செவிமடுத்த மக்களுக்கு கடைசியில் அவர் ஏமாற்றத்தையே தந்துள் ளார்" என்று கூறியுள்ளார் முதல்வர் கெஜ்ரிவால்.