பயங்கரவாதத்தை நோக்கி உங்கள் பிள்ளைகள் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்: மோடி

பயங்கரவாதத்தை நோக்கி உங்கள் பிள்ளைகள் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்: மோடி

1 mins read
65898561-830b-4f7d-bc81-44628cc10a05
-

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டு உரையாற்றி னார். அப்போது அவர், பயங்கர வாதம், நிழல் உலக நடவடிக்கைகள், குற்றச்செயல்கள் போன்றவை அதிகரிப்பதற்கு கறுப்புப் பணம் மட்டும்தான் காரணம். எனவே தங்கள் வீட்டு இளை ஞர்களைப் பெற்றோர்கள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண் டி யது அவசியம் ஆகும்.

அப்போதுதான் அவர்கள் பயங்கர வாதத்தை நோக்கிச் செல்லாமல் தடுக்கப்படுவார்கள். மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து சட்டவிரோத செயல் களில் ஈடுபட்டு வந்த ஏராளமான இளைஞர்கள் அண்மைக்காலத்தில் தங்களது மனதை மாற்றிக் கொண்டு சட்ட அமலாக்க முகமை களிடம் சரண் அடைந்து இருக் கின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப் புப் படையினருக்கு எதிராகப் பெரும் எண்ணிக்கையிலான இளை ஞர்கள் கல்வீச்சு சம்ப வங்களில் ஈடுபட்டு வந்தனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்பு இந்தக் கல்வீச்சு சம்பவங்கள் நின்றுவிட்டன என்றார் பிரதமர் மோடி.