திருச்சி: திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் பத்து லட்சம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்தனர். காஞ்சி புரம், திருவள்ளூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெல், மஞ்சள், உளுந்து, மக்காச்சோளம் போன்ற வற்றைப் பயிரிட்டு இருந்தனர்.
டெல்டா பாசனத்துக்காக மேட் டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் அணை மூடப் பட்டது.

