லக்னோ: கடந்த 25 ஆண்டுகால மாக சைக்கிள் சின்னம் ஒரு வலுவான சமூக அடையாளத்தை சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுக் குத் தந்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு முலாயம் சிங் யாதவும் அவரது மகன் அகிலேஷ் யாதவும் உரிமை கோருவதால் சின்னம் முடக்கப் படும் நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளது. அத்துடன், இருவருமே சமாஜ்வாடி பெயரை கேட்பதால் சமாஜ்வாடி (முலாயம்), சமாஜ் வாடி (அகிலேஷ்) என்ற பெயர்களில் போட்டியிடும்படி முலாயம் சிங், அகிலேசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ளும். ஆனால் இதை இருவருமே விரும்ப வில்லை.
எனவே கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்ற முலாயம் சிங்குக்கும் அகிலேசுக்கும் இடையே கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. முலாயம்-அகிலேஷ் இருதரப் பினருக்கும் நோட்டீசு அனுப்பி யாருக்குக் கட்சியில் அதிக ஆதரவு இருக்கிறது என்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும். அந்த ஆய்வில் தெளிவான நிலைக் கிடைத்தால் யாருக்காவது ஒருவருக்குச் சைக்கிள் சின்னம் கிடைக்கும். அப்படி இல்லாமல் தேர்தல் ஆணையத்தால் ஒரு முடிவுக்கு வர முடியாத பட்சத்தில் சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்படும். இவ்வார இறுதி யில் 5 மாநிலத் தேர்தல் தேதி பட்டியல் வெளியாக உள்ளது.
சைக்கிள் சின்னத்துக்கு போட்டிபோடும் தந்தை முலாயம் சிங் யாதவ், மகன் அகிலேஷ். படம்: ஊடகம்

