500 கடைகளை மூடிய பின்னரும் புத்தாண்டு மதுபான விற்பனை ரூ.210 கோடிக்கு எகிறியது

500 கடைகளை மூடிய பின்னரும் புத்தாண்டு மதுபான விற்பனை ரூ.210 கோடிக்கு எகிறியது

1 mins read

சென்னை: புத்தாண்டைக் கொண் டாடுவதற்காக இந்த முறை அதிக மானோர் மதுபானம் குடித்துள்ளது தெரிய வந்துள்ளது. புத்தாண்டு தொடங்குவதற்கு முன்னர் டிசம்பர் 31ஆம் தேதி மட்டும் தமிழ்நாடு முழுவதும் ரூ.112 கோடிக்கும் புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி ரூ.98 கோடிக்கும் மதுபானம் விற் பனை ஆனதாக டாஸ்மாக் தெரி வித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 விழுக்காடு அதிக விற்பனை நடந்துள்ளது. "இரு நாட்களிலும் மதுவிற்பனை அமோகமாக நடந்தது. பணத் தட்டுப்பாடு விற்பனையைப் பாதிக் கும் என்று எதிர்பாத்த வேளையில் எங்கள் கடையில் 25 விழுக்காடு அதிக விற்பனை நடந்துள்ளது," என்று கிண்டியைச் சேர்ந்த டாஸ் மாக் கடை ஒன்றின் விற்பனை யாளர் 'தி இந்து' நாளிதழிடம் தெரிவித்தார். அதிமுக அரசு தேர்தல் அறிக்கை யில் உறுதியளித்தபடி 500 மது பானக் கடைகளை மூடியதற்குப் பிறகும் விற்பனை அதிகரித் துள்ளது குறிப்பிடத்தக்கது.