புத்தாண்டில் பெங்களுரில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை

புத்தாண்டில் பெங்களுரில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை

1 mins read

பெங்களுர்: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களுரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அங்கிருந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப் பட்டது. இந்த விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநில காவல்துறை குற்றவாளி களை அடையாளம் காணும் பணியைத் தொடர்ந்து வருகிறது, இதன் தொடர்பில் உள் கட்டமைப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் காணொளிப் பதிவு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் பெங்களுரில் உள்ள கம்மானாஹாலி பகுதியில் சாலை ஒன்றில் இரவில் இளம்பெண் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது அதே சாலையில் மோட்டார்சைக்கிளில் வரும் இரு இளைஞர்கள் அவரை வழிமறித்தனர். அந்த இளம் பெண்ணிடம் இளைஞர்கள் கொடூரமான முறை யில் நடந்துகொண்டனர்.