சென்னை: அடுத்த பத்து தினங் களில் அதிமுக பொதுச்செயலர் சசிகலா நடராஜன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர் என்றும் கூறி உள்ளார். "அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. சசிகலா வின் கணவர் நடராஜன்தான் நெருக்கடி கொடுத்து வருகிறார். இன்னும் 10 நாட்களில் தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார். அவர் முதல்வராக அதிமுக வில் எந்த தடையுமே இல்லை. "சசிகலா முதல்வராவதில் மத் திய அரசு எதுவும் செய்ய முடி யாது. ராஜீவ்காந்தி இருந்தவரை சோனியா காந்தி எதுவும் பேசியதே இல்லை. அவர் வெளி நாட்டுக்காரராக இருந்தபோதும் காங்கிரஸ் கட்சியையும் ஆட்சி யையும் வழிநடத்தியவர்," என்று சுப்பிரமணியம் சுவாமி குறிப்பிட் டுள்ளார்.
சசிகலாவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், ஜெயலலிதா இருந்தபோது அனைத்து நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டது சசிகலா தான் என்றார். "நடிகர் ரஜினிகாந்த் அரசிய லுக்கு தகுதியானவர் அல்ல. அவருக்கு தமிழக அரசியலில் எதிர்காலமும் இல்லை. ரஜினிகாந்த் எதிலும் ஒரு நிலையானவர் அல்ல. அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ள சசிகலாவுக்கு ரஜினிகாந்த் மூலமாக எந்த ஒரு சவாலும் வரப்போவதும் இல்லை. "தமிழகத்தைப் பொறுத்தவரை யில் வாக்காளர்கள் சுயமாக வாக்களிக்கக் கூடியவர்கள். இளைய தலைமுறை வாக்காளர்கள் தேசிய சிந்தனையுடன் இருக்கிறார்கள். தமிழக பாஜகவின் தற்போதைய நிர்வாக அமைப்பை வைத்துக் கொண்டு மாற்று அரசியல் செய் யவே முடியாது," என்றார் சுவாமி.

