6.5 லட்சம் மதிப்பிலான ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் பிடிபட்டன

6.5 லட்சம் மதிப்பிலான ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் பிடிபட்டன

1 mins read

புதுடெல்லி: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகளைப் போலவே கள்ளநோட்டுகள் அச்சிட்ட கும்பல் புதுடெல்லியில் பிடிபட்டுள்ளது. அவர்களிடமிருந்து 6.5 லட்ச ரூபாய் அளவிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன. கள்ளநோட்டுகளை உண்மையான ரூபாய் நோட்டுகளுடன் கலந்து சந்தையில் விட முயன்றபோது இந்தக் கும்பல் பிடிபட்டது. மேலும் 20,000 கள்ள நோட்டுகளை அவர்கள் ஏற்கெனவே சந்தையில் விட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றச் செயலின் முக்கிய குற்றவாளியான கிஷான் கணினி தொடர்பான அச்சுப் பணியில் நிபுணத்துவம் பெற்றவன் என்றும் போலிசார் குறிப்பிட்டுள்ளனர்.