அறுவடைத் திருநாளுக்காக இரவு, பகலாகத் தயாராகும் பட்டங்கள்

அறுவடைத் திருநாளுக்காக இரவு, பகலாகத் தயாராகும் பட்டங்கள்

1 mins read
233c3347-dd97-4bca-825a-2c352317191f
-

அறுவடைத் திருநாளாகக் கருதப்படும் லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு அம்ரிஸ்டரில் பட்டங்களின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ள லோஹ்ரி திருவிழாவின்போது பட்டங்களைப் பறக்கவிடுவதற்காக பல வண்ணங்கள், கருத்துகள் அடங்கிய பட்டங்களை அனைத்து வயதினரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். அம்ரிஸ்டரில் உள்ள பட்டம் செய்யும் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் இரவு, பகலாகப் பட்டம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு சில இடங்களில் பட்டம் விடும் போட்டியும் நடைபெறும். படம்: ஏஎஃப்பி