தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்திராவில் மகளிர் இலவசப் பயணத் திட்டத்துக்கு 74% பேருந்துகள் ஒதுக்கீடு

1 mins read
d5f18973-3cb0-48ee-86cf-7e14c1706182
ஆந்திராவில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்​டம் ஆகஸ்ட் 15லிருந்து நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

விசாகப்பட்டினம்: இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்​டம் அறிமுகப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த மகளிர் இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் குறித்து ஆந்திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அறிவித்தார். தேர்​தல் வாக்​குறு​தி​களில் இத்திட்டமும் ஒன்று என்றார் அவர். அதை நடப்புக்குக் கொண்டு வர ஆந்திர அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்​நிலை​யில், ஆந்​திர மாநில அரசு பேருந்துப் போக்​கு​வரத்துக் கழகத்தின் நிர்​வாக இயக்​குநர் துவாரகா திரு​மல​ராவ், திருப்​பதி அடுத்​துள்ள வெங்​கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை ஆய்வு செய்​தார்.

“மகளிருக்​கான இலவசப் பேருந்துத் திட்​டத்​துக்​காக தற்​போதைய நிலவரப்படி 750 புதிய பேருந்​துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 600 பேருந்​துகள் வர உள்​ளன. அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் இத்​திட்​டம் நடைமுறைப்படுத்தப்படும்.

“மொத்​தம் 11,000 பேருந்​துகளில் 74 விழுக்காடு பேருந்​துகள் மகளிர் இலவசப் பயணத் திட்​டத்​துக்​காக ஒதுக்​கப்பட உள்​ளன. இத்​திட்​டம் ஒருங்​கிணைந்த மாவட்​டங்​களில் செயல்​படுத்​தப்​படும். அனைத்துப் பேருந்து நிலை​யங்​களி​லும் குடிநீர், கழிவறை, மின்​விசிறி, இருக்கை வசதி​கள் ஆகியவை செய்து தரப்​படும்,” என்று திருவாட்டி துவாரகா திருமலராவ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்