முதல்வர் பன்னீர்செல்வம்: பிரச்சினை வராது என்பதால் சசிகலாவின் காலில் விழுந்தேன்

முதல்வர் பன்னீர்செல்வம்: பிரச்சினை வராது என்பதால் சசிகலாவின் காலில் விழுந்தேன்

1 mins read
480aac27-3b9e-446a-b2a8-43b3a1c796f8
-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்த இப்போதைய முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா காலிலும் விழுந்து வருகிறார். அண்மையில் அவரைச் சந்தித்த தமிழக மூத்த அமைச்சர்கள் சிலர் நீங்கள் யார் காலிலும் விழவேண்டி யதில்லை என்று அன்புடன் கூறி இருக்கின்றனர். ஆனால், அதற்குப் பதிலளித்த முதல்வர் ஓபிஎஸ் காலில் விழ வேண்டிய கட்டாயத்தை விளக்கிய தாக தமிழக நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. "நான் தன்னிச்சையாகச் செயல்படுவது சிலருக்குப் பிடிப்பதில்லை.

என்னை பல வழிகளிலும் செயல்படவிடக்கூடாது என முயற்சிக்கின்றனர். அதற்காக நான் கவலைப்படுவது கிடையாது. இப்போதுகூட என்னை தொடர்ச்சியாக முதல்வராக செயல்பட அனுமதிக்கமாட்டார்கள் என்பது தான் கிடைத்திருக்கும் செய்தி. "இந்தச் சூழ்நிலையில் முதல்வராக இருக்கும் நானே அவர்களுடைய காலுக்குக் கீழ்தான் என வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே என்னை குனிந்து வணக்கம் போடச் சொன்னவர்கள் பின்னர் காலில் விழச் சொன்னார்கள். விழுந்தால் பிரச்சினை இல்லை என்பதை உணர்ந்தேன்; விழுந்தேன். "இதனால், என் கெளரவம் குறைந்துபோவதாக நான் உணரவில்லை. காலில் விழ அனுமதிப் பவர்களுக்கு எதிராகத்தான் இது செல்லும் என்பதை அறிந்துதான் அதைச் செய்தேன்," என்று ஓபிஎஸ் கூறினாராம்.