சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்ற 10 லட்சம் பேர்

சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்ற 10 லட்சம் பேர்

1 mins read
f2b885d3-6ba1-444f-8344-45da4b0fd9c3
-

பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ரயில்கள், பேருந்துகள், சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் சென்றுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அனைத்து ரயில்களிலும் பெருங்கூட்டம் காணப்பட்டது. சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. போலிசார் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். படம்: தகவல் ஊடகம்