பன்னீர்செல்வம்: அம்மா காட்டிய வழியில் தமிழக அரசு பயணம் செய்யும்

பன்னீர்செல்வம்: அம்மா காட்டிய வழியில் தமிழக அரசு பயணம் செய்யும்

1 mins read
5d54f000-b918-45ea-bfca-01781831ae97
-

சென்னை: ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு தொடர்ந்து பயணிக்கும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்ப் பேரறிஞர்கள் பெயரில் தமிழக அரசு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்றுக் காலை நடை பெற்றது. இதில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்று திருவள்ளுவர் விருதை புலவர் பா. வீரமணிக்கும் தந்தை பெரியார் விருதினை பண் ருட்டி ராமச்சந்திரனுக்கும் அண் ணல் அம்பேத்கர் விருதை மருத்து வர் துரைசாமிக்கும் வழங்கினார். இதே போல் பேரறிஞர் அண்ணா விருது கவிஞர் கூரம் துரைக்கும் பெருந்தலைவர் காமராஜர் விருது நீலகண்டனுக் கும் மகாகவி பாரதியார் விருது பேராசிரியர் முனைவர் கணபதி ராமனுக்கும் பாவேந்தர் பாரதி தாசன் விருது கவிஞர் கோ.

பாரதி தமிழ்த் தென்றலுக்கும் திரு.வி.க விருது பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது மீனாட்சி முருகரத்தினத்துக்கும் வழங்கப் பட்டன. ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஒரு பவுன் தங்கப்பதக்கம் ஆகிய வற்றையும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.

திருவள்ளுவர் திருநாள் விழாவில் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள் மற்றும் விருது பெற்றவர்கள். படம்: இந்திய ஊடகம்