திண்டுக்கல், தஞ்சாவூர் உட்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டு

திண்டுக்கல், தஞ்சாவூர் உட்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டு

1 mins read
18a1a4a7-fb67-4690-9b37-5492ebd57bab
-

திண்டுக்கல்: ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடை அகற்றபடாத தால் திண்டுக்கல் மாடுபிடி ஆர் வலர்கள் தடையை மீறி ஜல்லிக் கட்டு நடத்துவோம் என்று அறி வித்திருந்தனர். அதன்படி திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதனை காண் பதற்கும் காளைகளை அடக்கு வதற்கும் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.

அவனியாபுரம், பால மேடு, மேலூர், சிவகங்கை ஆகிய பகுதிகளிலிருந்து 40க்கும் மேற் பட்ட காளைகள் வந்திருந்தன. இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர். ஆனால் தடையை மீறி நேற்றுக் காலை ஏழு மணிக்கு ஜல்லிக் கட்டுத் தொடங்கியது. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் அடக்கினர். காளை களைப் பிடித்த வீரர்களுக்குக் குக்கர், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், பித்தளை பாத் திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தஞ்சையிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. படம்: ஊடகம்