சென்னை: திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறி விக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதே கோரிக்கையை மேலும் பலர் முன் வைத்திருப்பதால் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார். ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதை கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலிசார் தடியடி நடத்தி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க திருமா கோரிக்கை
1 mins read

