டெல்லி-வா‌ஷிங்டன் இடையே ஜூலை மாதத்தில் தொடங்கும் விமானச் சேவை

டெல்லி-வா‌ஷிங்டன் இடையே ஜூலை மாதத்தில் தொடங்கும் விமானச் சேவை

1 mins read

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம், தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகருக்கு எங்கும் நிற்காத வகையில் நேரடி விமானச் சேவையைத் தொடங்க உள்ளது. டெல்லி-வா‌ஷிங்டன் இடையிலான இந்த இடை நில்லா விமானச் சேவையானது வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. வாரத்தில் மூன்று முறை விமானங்கள் இயக்கப்படும். இதற்காக இந்த வழித்தடத்தில் போயிங் 777 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.