புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த 22 மாதங்களில் மட்டும் நாள்தோறும் 777 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரை 2.43 லட்சம் வெறிநாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை ஏறக்குறைய 5.20 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர் என்று அரசுத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கால்நடைகளுக்கான கணக்கெடுப்பின்படி ஒடிசாவில்17.34 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2022-23 நிதியாண்டில் ஒடிசாவில் எட்டு நகர்ப்புறங்களில் 4,605 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாக அம்மாநில சட்டப்பேரவையில் கால்நடை மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


