இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரவுடிகளிடமிருந்து கணவரைக் காப்பாற்ற முற்பட்ட எட்டு மாத கர்ப்பிணியும் தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவியது.
தங்களுடைய மாமா குறித்து தகவல் அளிக்காததற்காக ரவுடிகள் நால்வர் அத்தம்பதியைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்தம்பதியின் வீட்டிற்குள் நுழைந்த ரவுடிகள், அவர்களுடைய மாமாவை வசைபாடினர். அவர்களைக் கணவர் எதிர்த்தபோது, ரவுடிகள் அவரைத் தாக்கினர்.
சமரசம் செய்ய முயன்ற அந்தக் கர்ப்பிணியை ரவுடிகள் ஈவிரக்கமின்றி தாக்கினர்.
"அந்தக் கர்ப்பிணி சண்டையை நிறுத்த முயன்றார். ஆனால் ரவுடிகள் அவரைத் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். கணவர் உதவி கோரியதைத் தொடர்ந்து, அண்டைவீட்டார் உதவிக்கு வந்தனர்," என்று காவல்துறை அதிகாரி சைலேந்திர பாஜ்பாய் ஏஎன்ஐ செய்தித் தளத்திடம் கூறினார்.


