483 மாணவியர் பானை மீது பரதநாட்டியம் ஆடி உலக சாதனை

483 மாணவியர் பானை மீது பரதநாட்டியம் ஆடி உலக சாதனை

1 mins read
2ebc80ec-4efd-4668-97fb-5d3826ea6d26
-

தமிழர் திருநாளையொட்டி பானை மீது பரதநாட்டியமாடி பள்ளி மாணவியர் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சேலம் குளூனி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 55ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் இச் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 483 மாணவிகள் குழுவினராக இணைந்து பானை யின் மீது நின்று இறைவணக்கப் பாடல், பாரதியாரின் 'பாரத சமுதாயம் வாழ்கவே' பாடல் ஆகிய வற்றுக்கு 6.4 நிமிடங்கள் பரத நாட்டியம் ஆடி சாதனை படைத் தனர்.

உலக சாதனைகளை அங்கீகரிக்கும் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏ‌ஷியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. படம்: இணையம்