மகாராஷ்டிராவில் ஒன்பது டன் வெள்ளி பறிமுதல்

1 mins read
15149ac8-9eee-4f34-bef8-9a0cfa720c9c
அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்பட்ட ஒன்பது டன் வெள்ளிக் கட்டிகளை மகாராஷ்டிரா காவல்துறை கைப்பற்றியுள்ளது. - படம்: ஊடகம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கு புதன்கிழமை ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், புதன்கிழமை அந்த மாநிலத்தின் துலே மாவட்டத்தில் காவல்துறையினர் சாலையில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாக்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் இருந்து ஏறக்குறைய 10 டன் எடையுள்ள வெள்ளிக் கட்டிகளைக் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக நாசிக்கின் சிறப்புக் காவல் கண்காணிப்பாளர் தத்தாத்ரே கராலே தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், வெள்ளி ஒரு வங்கிக்குச் சொந்தமானது என்றும் சரிபார்த்த பின்னர் அதை விடுவிப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடந்த சோதனை நடவடிக்கைகளில் ரூ.706.98 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், மதுபானங்கள், போதைப்பொருள் போன்றவற்றை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.

குறிப்புச் சொற்கள்