புதுடெல்லி: இந்தியாவில் 2010 முதல் 2019 வரைப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் போலியான சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்ததாக 1,084 புகார்கள் வந்தன.
அவர்களில் 92 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தகவலறியும் உரிமைச் சட்ட ஆவணங்களை ஆராய்ந்ததில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக அதிகமாக ரயில்வே துறையில் 349 புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து, அஞ்சல் துறையில் 259 புகார்களும் கப்பல் துறையில் 202 புகார்களும் வந்தன.
நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, போலிச் சாதிச் சான்றிதழ் புகார்கள் குறித்த தரவுகளைக் கடந்த 2010ஆம் ஆண்டுமுதல் பணியாளர், பயிற்சித் துறை சேகரித்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம், பூஜா கேத்கர் என்ற பெண் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் அனுமதிக்கப்பட்ட முறையைத் தாண்டி பங்கேற்பதற்காக தனது அடையாள ஆவணங்களை மாற்றி மோசடி செய்ததாக இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குற்றஞ்சாட்டியிருந்தது.
தனது விண்ணப்பத்தை ரத்துசெய்யும் யுபிஎஸ்சியின் முடிவை எதிர்த்து, பூஜா தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.