தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

1 mins read
c311a49b-2498-43cd-8542-cd4412c23acc
பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908” ஆய்வு நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  - படம்: இணையம்

புதுடெல்லி: பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908” ஆய்வு நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காலச்சுவடு பதிப்பாக 2022ல் வெளிவந்த இந்நூல் 1908 மார்ச் 13ல் வ.உ.சி., கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சியைப் பற்றிப் பேசுகிறது. திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல்.

ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதி.

இந்தியாவின் 24 மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் விருதளித்துச் சிறப்பித்து வருகிறது. விருதாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கம், செப்பு பட்டயம், பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.

2024ஆம் ஆண்டுக்கான விருதில் தமிழில் ‘ திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.,யும்- 1908’ நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்