தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய ஆதி கும்பேஸ்வரர் யானை

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய ஆதி கும்பேஸ்வரர் யானை

1 mins read
faf2a746-2a6b-4f1d-849a-22c2db785f67
இந்தியச் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய கோயில் யானை. - படம்: தினமணி இணையத்தளம்
Google News Preferred Icon

கும்பகோணம்: இந்தியச் சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நடைபெற்ற நிகழ்ச்சியில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கோல் மங்கலம் யானை தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது.

நாடு முழுவதும் சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்படும் வேளையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மூவண்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டு, நெற்றியில் மூவண்ண மலர்கள் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது.

பின்னர் தேசியக் கொடிக் கம்பத்தின் அருகில் சென்ற அந்த யானை தனது துதிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தியது.

நாட்டின் சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் யானை மங்கலம் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய காட்சி அங்கிருந்த பக்தர்களையும் பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோயில் யானை கொடிக்கு வணக்கம் செலுத்தும் காட்சியைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது கைப்பேசிகளில் புகைப்படமாகவும் காணொளியாகவும் பதிவுசெய்தனர்.

இதற்கிடையே, கோயில் சார்பில் அச்சடிக்கப்பட்ட சுதந்திர தினத் துண்டுப் பிரசுரத்தில் 80வது சுதந்திர தினம் என்பதற்குப் பதில் 79வது சுதந்திர தினம் அன அச்சடிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் சர்ச்சை மூண்டதாகவும் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்