தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை: ராகுல் காந்தி

2 mins read
5a7ab285-2385-4b5d-b128-396b965f27aa
காரில் வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையிலும், ‘வாக்குரிமை’ என்ற பெயரில் வாக்குத் திருட்டைக் கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 16 நாள் பயணத்தைத் துவங்கியுள்ளார். - படம்: இந்திய ஊடகம்

கயா: பீகார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பீகாரில் வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையிலும், ‘வாக்[Ϟ]குரிமை’ என்ற பெயரில் வாக்குத் திருட்டைக் கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 16 நாள் பயணத்தைத் துவங்கினார்.

இதில் பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயணத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை, கயாவில் ஒரு கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது “தேர்தல் ஆணையத்தின் ‘வாக்குத் திருட்டு’ பிடிபட்ட பிறகும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு என்னிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

“வாக்குத் திருட்டு’ நடவடிக்கையின் மூலம் இந்திய அரசியலமைப்பு மீதும் இந்திய நாட்டின் ஆன்மாவின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளீர்கள்,” என்று பாஜக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ராகுல் காந்தி சாடினார்.

“எங்களுக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள், ஒவ்வொரு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளிலும் உங்கள் வாக்குத் திருட்டை மக்கள் மத்தியில் நாங்கள் அம்பலப்படுத்துவோம்,” என்று கூறினார் ராகுல் காந்தி.

“பீகாரிலும் டெல்லியிலும் இண்டியா கூட்டணி அரசாங்கம் அமையும் நாள் வரும்; அப்போது வாக்குத் திருட்டு தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.

புதிய வடிவிலான வாக்குத் திருட்டு

பிரதமர் நரேந்திர மோடி சிறப்புத் தொகுப்பு பற்றிப் பேசுவது போல, தேர்தல் ஆணையம் பீகாருக்கு சிறப்புத் தீவிர திருத்தம் என்ற சிறப்புத் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதாவது புதிய வடிவிலான வாக்குத் திருட்டு.

தேர்தல் ஆணையர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் ஒரே குரலில் தங்கள் மாநிலத்தில் ‘வாக்குத் திருட்டு’ செய்ய முடியாது என பீகார் மக்கள் கூறுவார்கள் என்றார் ராகுல் காந்தி.

குறிப்புச் சொற்கள்