தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.60,000 கோடியில் ஏழு விமான நிலையங்களை விரிவுபடுத்த அதானி திட்டம்

1 mins read
20161c8e-dafb-4906-8ec0-850b9e317b03
கரண் அதானி. - படம்: ஊடகம்

மும்பை: அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் ரூ.60,000 கோடி முதலீட்டில் ஏழு இந்திய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் நிர்வகிக்கும் விமான நிலையங்களின் கொள்ளளவு 2040ஆம் ஆண்டிற்குள் மூன்று மடங்குவரை அதிகரிக்கும் என்று அக்குழுமத்தின் மேலாண் இயக்குநர் கரண் அதானி தெரிவித்துள்ளார்.

மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, கௌகாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் ஆகியவையே அந்த ஏழு விமான நிலையங்கள்.

நவி மும்பை விமான நிலையத்தின் முதற்கட்ட மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.18,000 கோடி, இந்த 60,000 கோடி ரூபாய் திட்டத்திற்குள் வராது என்று அதானி விமான நிலைய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் பன்சால் குறிப்பிட்டார்.

லக்னோ விமான நிலையத்தின் புதிய முனையம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) திறக்கப்பட்டது.

அதில் கலந்துகொண்டு பேசிய கரண் அதானி, இப்போதைக்கு அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்கள் ஆண்டுதோறும் 10-11 கோடி பயணிகளைக் கையாள்கின்றன என்றும் 2040ஆம் ஆண்டிற்குள் அந்தக் கொள்ளளவை 25-40 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம் என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்